தமிழர்கள் இந்துக்களா? -ஒரு மாறுபட்ட பார்வை.

Raja.M
தமிழர்களிடம், மாமன் மகள்/மகனை & அத்தை மகள்/மகனை மணந்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அது போல் ஒரு பெண் தன் தாய்மாமனை மணந்து கொள்ளலாம்.


இது போன்ற உறவுமுறை திருமணம், “இந்து திருமணச் சட்டம் 1955”ல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்துக்களின் Yājñavalkya Smṛti என்ற மனுஸ்மிருதி யிலும் தடை செய்யப் பட்டுள்ளது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

என்னடா இப்படி ஒரு குண்ட தூக்கி போடுறானேன்னு பாக்குறீங்களா? Don't Worry We have Exceptions.

தமிழர்களுக்கு & கலாச்சாரத்தில் தொன்று தொட்டு
இது போன்ற உறவுமுறை திருமணம் இருந்தால் “இந்து திருமணச் சட்டம் 1955”ல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இப்போது சொல்லுங்கள் நீங்கள் தமிழரா அல்லது இந்துவா?

இது போன்ற உறவுமுறை திருமணம் திராவிட இனத்தவரிடம் சகஜம். இஸ்லாமியர்களின் உறவுமுறை திருமணத்த்திற்குள் இப்போது நாம் செல்ல வேண்டாம்.

SAPINDA RELATIONSHIP (சபிண்டா உறவு) தன் தந்தைவழி, தாய்வழி ரத்த உறவுகளை சபிண்டா (Sapinda) என்பர். “சக-பிண்டம்” என்ற அர்த்தத்தில் இருக்கலாம்!! சபிண்டா உறவு என்பது ‘தாய்வழி உறவாக இருந்தால், மூன்று தலைமுறைக்கும், தந்தைவழி உறவாக இருந்தால் ஐந்து தலைமுறைக்கும்’ இந்த ரத்த உறவு தொடரும். இந்த உறவுகளில் திருமணம் செய்யக் கூடாது. ஏனென்றால், இவர்களை நமது உடன்பிறந்தவர்களைப் போல நினைத்துக் கொள்ள வேண்டும். ஒரே இரத்தம் என்ற உறவு. ஒரே கோத்திரம். தந்தைவழி, தாய்வழி சபிண்டா உறவு என்றால், அத்தை மக்கள் மாமன் மக்கள்(நமது தந்தையுடன் பிறந்தவர்களின் குழந்தைகள், மற்றும் நமது தாயுடன் பிறந்தவர்களின் குழந்தைகள்) இவர்களைத்தான் சபிண்டா ரத்த உறவு என்று சொல்வர். ஆங்கிலேயர்கள் இவர்களை ‘Cousin’ என்று பொதுவாகவே அழைக்கின்றனர். Cousin என்றால் நம் பெற்றோருடன் உடன்பிறந்தவர்களின் குழந்தைகளைப் பொதுவாக சொல்லும் உறவுமுறை.
சபிண்டா உறவு
ஆனால் தென் இந்தியாவில் வேறு முறை: Cousin-களில் தந்தையின் சகோதரன் குழந்தைகளும், தாயின் சகோதரி குழந்தைகளை மட்டும் நாம் சபிண்டா உறவு என்று (சகோதர, சகோதரி உறவு) என்று நினைக்கிறோம். தமிழர்கள் இவர்களை திருமணம் செய்வதில்லை.
மாறாக, நமது அத்தை மக்களையும் & மாமன் மக்களையும் சபிண்டா உறவாக நினைப்பதில்லை, மாறாக அவர்களை திருமண உறவாக கருதுகிறோம்.

தமிழர்கள் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது முதலில் கேட்க்கும் கேள்வி உங்கள் குலதெய்வம் என்ன? ஒரே குலதெய்வத்தய் வணங்குபவர்கள் தங்களுக்குள் சம்பந்தம் செய்யமாட்டார்கள் ஒரே குலதெய்வத்தை வணங்குபவர்கள் சகோதர சகோதரி ஆவார்கள். இங்கு குலதெய்வம் என்பது தந்தை வழி தெய்வம். அனால் திருமணத்திற்கு பின் ஒரு பெண்ணின் குலதெய்வம் என்பது கணவன் விட்டு குலதெய்வம் தான்.

இந்து திருமணச் சட்டம் 1955 (THE HINDU MARRIAGE ACT 1955) இந்து திருமணச் சட்டம் 1955ல் சபிண்டா உறவில் திருமணம் செய்வது தடை செய்யப் பட்டுள்ளது. ஆனாலும், ஏதாவது ஒரு பகுதியில், ‘சபிண்டா உறவுக்குள்’ திருமணம் செய்து கொள்வது நீண்டகால பழக்க வழக்கமாக இருந்தால், அதற்கு சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது. இந்த விதிவிலக்கைக் கொண்டுதான், தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் "அத்தை-மகள், மாமன்-மகள்" இவர்களை திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. (இந்த வழக்கம் இல்லையென்றால், இது இந்து திருமணச் சட்டப்படி தவறாகும். நமது ஊரில் Cousin marriages சர்வ சாதாரணமாக நடந்துவருகிறது). ஒரே கோத்திரம் என்பது சகோதர-சகோதரி உறவில் இருப்பதால், பழங்காலத்தில் இத்தகைய உறவுக்குள் திருமணம் செய்யாமல் தவிர்த்து வந்தனர். பழக்கமா, இல்லை விஞ்ஞானபூர்வ காரணமா என்று தெரியவில்லை.
அனால் ஒன்று மட்டும் உறுதி தமிழர்களாகிய நம் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் வேறு, ஆரியர்களின் பண்பாடு வேறு.
ref: https://en.wikipedia.org/wiki/Sapinda

Comments