சிவராத்திரி அன்று குலதெய்வத்தை வழிபடுங்கள். காட்டை அழித்த கார்ப்பரேட் சாமியாரை பார்க்க போகாதீங்க. அவர்களின் குறிக்கோள் குலதெய்வ வழிபாட்டை அழித்து பெரு தெய்வ வழிபாட்டை மட்டும் நிலை நிறுத்துவது.
No ஆகமம், விலங்குகள் பலி, சாராயம் சுருட்டு போன்ற படையல் போன்ற வழிபாட்டு முறைகளால் குலதெய்வ வழிபாட்டு தனித்தே இருந்து வருகிறது.
கோவிலிகளில் விலங்குகள் பலியிடும் தடைச்சட்டம் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது இவற்றிற்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இதன் நோக்கம் மேட்டுக்குடி புரோகிதர்கள் சிறுதெய்வ வழிபாட்டில் நுழைவது என நம்பப்பட்டது. ஆனாலும் தமிழர்களின் தீவிர எதிர்பாலஎதி இச்சட்டம் கைவிடப்பட்டது. குலதெய்வ வழிபாடு வைதீகமான இந்து மதத்தை பொருத்தவரை அன்னியமே, அதற்கான சில குறிப்புகள் கீழே.
குலதெய்வ வழிபாடு பற்றிய சில குறிப்புகள்
"நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்" என்பார்கள்
குலதெய்வ வழிபாடு தமிழர்களின் முக்கியமான வழிபாட்டு முறையாகும். பெருதெய்தெவத்ன்னிதை விட குலதெவத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு முதல் மொட்டை, காதுகுத்து, முதல் திருமண பத்திரிக்கை குலதெய்வத்திற்கு என குலதெய்வத்திற்கே முதல் இடம்.
இந்தியாவில்இபொதுவாக குலதெய்வ வழிபாடு இன்னும் பின்பற்றப்படுகிறது. மற்ற பகுதிகளில் வழக்கொழிந்து போய் விட்டாலும் ஆங்காங்கே சில இடங்களில் இன்னும் பின்பற்றப்படுகிறது.
குலதெய்வ வழிபாடு, சிவன், பெருமாள் போன்ற பெறுதெய்வ வழிபாட்டுக்கு காலத்தால் முந்தையது. குலதெய்வ வழிபாட்டு முறைகளில் வைதீகம் நுழைந்தது ஆதிசங்கரர் காலத்தில் என நம்பப்படுகிறது. ஆனாலும் வைதீகத்தால் 100% இதனுள் ஊடுறுவ முடியவில்லை.
ஏனென்றால் குலதெய்வ வழிபாட்டு முறை முற்றிலும் வேறுபட்டது. No ஆகமம், விலங்குகள் பலி, சாராயம் சுருட்டு போன்ற படையல் போன்ற வழிபாட்டு முறைகளால் குலதெய்வ வழிபாட்டு தனித்தே இருந்து வருகிறது.
கோவிலிகளில் விலங்குகள் பலியிடும் தடைச்சட்டம் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது இவற்றிற்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இதன் நோக்கம் மேட்டுக்குடி புரோகிதர்கள் சிறுதெய்வ வழிபாட்டில் நுழைவது என நம்பப்பட்டது. ஆனாலும் தமிழர்களின் தீவிர எதிர்பாலஎதி இச்சட்டம் கைவிடப்பட்டது. குலதெய்வ வழிபாடு வைதீகமான இந்து மதத்தை பொருத்தவரை அன்னியமே, அதற்கான சில குறிப்புகள் கீழே.
குலதெய்வ வழிபாடு பற்றிய சில குறிப்புகள்
- மறைந்த முன்னோர் வழிபாடே காலப்போக்கில் குலதெய்வ வழிபாடாக மாறியதாக சொல்கிறார்கள்.
- குல தெய்வ வழிபாட்டின் மகிமை பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வீரத்தோடு வாழ்ந்து வீர மரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் வழிபாடு செய்வது சங்க காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்தது. அதில் இருந்து குல தெய்வ வழிபாடு உருவாகி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
- பெரும்பாலான குல தெய்வ வழிபாடுகள் சூலம், பீடம், மரம், கரசம், கல், பெட்டி போன்ற அடையாள குறியீடுகளைக் கொண்டே நடத்தப்படுகின்றன.
- குல தெய்வங்களுக்கு இதிகாச அடிப்படை எதுவும் கிடையாது.
- குல தெய்வ வழிபாடு களில் பூஜைகள் முறைப்படி இல்லாமல் பெரியவர்களின் இஷ்டப்படியே நடக்கும்.
- குல தெய்வ வழிபாடுகளில் உயர்சாதி இந்துக்கள் பூசாரிகளாக இருக்க மாட்டார்கள். உள்ளூர் ஆண/பெண்களே பூசாரிகளாக இருப்பதுண்டு.
- குல தெய்வங்களின் சிறப்புகள் கல்வெட்டுக்களாக இருப்பது இல்லை. பெரும்பாலும் செவி வழிக்கதைகளாகவே இருக்கும்.
- தமிழ் நாட்டில் உள்ள குல தெய்வங்களில் பெரும்பாலான குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாக உள்ளன.
- குல தெய்வ கோவில் கள் ஆகம விதிப்படி கட் டப்பட்டிருக்காது. இடத்துக்கு ஏற்பவே அமைந்திருக்கும். ராஜகோபுரம், மாட வீதிகள் என்று இருப்பதில்லை. சிறிய கோவில் அமைப்பாகத்தான் இருக்கும்.
- தமிழ்நாட்டில் இன்றும் 90 சதவீத குலதெய்வ கோவில் வழிபாடுகளில் பலியிடுதல் நடைபெறுகிறது. ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிடப்படுவது தொடர்ந்து நடக்கிறது.
- ஒரே குலதெய்வம் கும்பிடுபவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள்.
- ஐய்யனார், மதுரை வீரன், காத்தவராயன், ஒண்டிக் கருப்பன், கருப்பண்ண சாமி, வீரனார், சங்கிலிக் கருப்பன், ஆகாய கருப்பன், ஆத்தடி கருப்பன், நொண்டிக் கருப்பன், மார்நாட்டு கருப்பன், மண்டக் கருப்பன், முன்னடிக் கருப்பன், சமயக் கருப்பன், பெரிய கருப்பன், சின்னக் கருப்பன் உள்ளிட்ட கருப்பசாமிகள் உள்ளனர். அதேபோல வீரமா காளி, குலுமாயி அம்மன், மகமாயி, எல்லைப் பிடாரி, பெரியாச்சி, எல்லை மாரி, பேச்சியம்மன், பூவாடைக்காரி, செல்லியம்மன், கன்னிமார், சீலைக்காரி, பச்சையம்மன், துலக்கானத்தம்மன், வனதுர்கை, செல்லாயி அம்மன், காட்டேரி அம்மன், அம்முச்சியார், மாசானியம்மன் உள்ளிட்ட பெண் குலதெய்வங்கள் உள்ளனர்.
Comments
Post a Comment