Raja.M
நண்பர் ஒருத்தர் மெடிடேசன் மாஸ்டர், வாங்க மெடிடேசன் சொல்லி தர்றேன்னு சொன்னாரு. மெடிடேசன் கத்துக்கிற அளவுக்கு என்கிட்ட பணமில்லை அதுமட்டுமல்ல அங்க வந்தா என் வாய் சும்மா இருக்கதே அப்படின்னு சொன்னேன். பரவாயில்லை பணம் இருக்கிறவங்க கிட்ட வாங்கிருவேன், உனக்கு இலவசம், நீ வா உன்ன மட்டுமல்ல உன் வாயையும் சரி பண்ணிடுவேன் சொல்லி,
கூட்டிட்டு போய் கிளாஸ் எடுத்தாரு.

நம்ம உடம்பை கட்டுப்படுத்துவதை விட, மனசை கட்டுப்படுத்துவது கடினம். ஏனெனில் நம் மனசு சாமி கும்பிடும் போது வெளியில விட்ட செருப்பை நினைக்கும், விரதம் இருக்கும் போதுதான் உணவை பற்றி நினைக்கும், இதுக்கு ஒரு உதாரணம் வேற சொன்னாரு.
நீங்க ஒரு காரை Start பண்றீங்க, ஆனா அந்த கார்....
Rightல திருப்பினா, Leftல போகுது.
Leftல திருப்பினா, Rightல போகுது.
Front Gear யை போட்டா, பின்னாடி போகுது.
Reverse Gear யை போட்டா, முன்னாடி போகுது.
அப்ப நீங்க என்ன பண்ணுவீங்கன்னு கேட்டார்?
மெக்கானிக்கிட்ட விடுவேன்னு ஒருத்தரும்,
காரை விட்டு இறங்கிடுவேன்னு இன்னொருத்தரும் சொன்னாங்க.
ஆனா மாஸ்டரோ என்ன சொன்னார் தெரியுமா?
"Brake போட்டு காரை முதல்ல நிறுத்தணும்"
அதுதான் நீங்க உடனடியா செய்ய வேண்டியதுன்னு சொன்னார்.
நானும் வாய தொறக்காம எவ்வளவு நேரம் தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது.
So சிம்பிளா நான் ஒன்னு கேட்டேன், அதுக்கு அவரு என்ன மேல கீழ பாத்துட்டு, நீ இங்க இருந்தா என் ஃபிஸ்னஸ்ச மட்டுமல்ல மத்த ஸ்டூடண்சையும் கெடுத்துருவ, வீட்டுக்கு கெளம்பு அப்படின்னு சொல்லிட்டார்.
ஆமா நான் அப்படி நான் என்ன தான் கேட்டேன்????
நாங்கெல்லாம் ஏகலைவன் மாதிரி, அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டே மேற்கு தொடர்ச்சி மலைப்பக்கமா யாருமே இல்லாத அருவிகுள்ள உக்காந்து நானே தியானம் பண்ணுனேன். என்ன ஆச்சரியம் எனக்குள் ஒரு குரல் ஒலித்தது. "வாயை கட்டு, வளமாயிரு"
எனக்கு முதல்ல இதோட அர்த்தம் புரியல , அப்பறம் தான் எனக்குள் இருக்குற கருத்து கந்தசாமி தான் அர்த்தம் சொன்னான்.
கருத்து கந்தசாமி: "முதல்ல வாயை (in & out - food & word) Control பண்ணுங்கப்பா, அப்புறம் மனசை Control பண்ணலாம்."

"அந்த டப்பா கார்ல ப்ரேக் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமா?"
இதை தான் கேட்டேன்.
நாங்கெல்லாம் ஏகலைவன் மாதிரி, அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டே மேற்கு தொடர்ச்சி மலைப்பக்கமா யாருமே இல்லாத அருவிகுள்ள உக்காந்து நானே தியானம் பண்ணுனேன். என்ன ஆச்சரியம் எனக்குள் ஒரு குரல் ஒலித்தது. "வாயை கட்டு, வளமாயிரு"
எனக்கு முதல்ல இதோட அர்த்தம் புரியல , அப்பறம் தான் எனக்குள் இருக்குற கருத்து கந்தசாமி தான் அர்த்தம் சொன்னான்.
கருத்து கந்தசாமி: "முதல்ல வாயை (in & out - food & word) Control பண்ணுங்கப்பா, அப்புறம் மனசை Control பண்ணலாம்."
கதை இதோட முடியுது, காமெடி வேணும்னு நினைக்குறவங்க மேல தொடரலாம், இது ஒரு சினிமா பட காமெடி.இதை நண்பரிடம் சொல்லலாம் என நினைத்து என் பழைய மெடிடேசன் மாஸ்டரிடம் சென்றேன். அப்போது அவர் தியான வகுப்பில் கண்களை மூடி மூச்சை கட்டுப்பத்துவது பற்றி பயிற்சி எடுத்து கொண்டிருந்தார் அப்போது அவருக்கு ஒரு போன் கால்....
- நம்ம புது மாடு கையற அவுத்துக்கிட்டு ஓடுது என்ன பண்ண?
- விடாத நல்லா இழுத்து புடி. (நம்ம மாணவர்கள் நாமளா தான் சொல்லுறாருனு நினைச்சு, மூச்சை நல்லா இழுத்து புடிக்குறாங்க )
- முடியல எனையவும் சேர்த்து இழுக்குது மாஸ்டர்.....
- விடவே விடாத நல்லா இழுத்து புடி (மாணவர்கள் நல்லா தம் கட்டுறாங்க )
- மாஸ்டர் மாடு ஓடிருச்சு ..... மாஸ்டர் இங்க ஒருத்தர் மயக்கமாயிட்டாரு......
Raja.M
Comments
Post a Comment