ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

உலகம் எப்படி தோன்றியது என்ற கேள்விக்கு நாம் வாழும் காலத்திலேயே விடை கிடைத்தால் எப்படி இருக்கும்! உண்மையில் அதற்கான நேரம் நெருங்கி வருகிறது.... பேரண்டத்தின் விடை தெரியாத மர்மங்கள் பல அவிழ்க்கப்படலாம்... பல வானியல் கோட்பாடுகளே மாற்றி எழுதப்படலாம்... 

ஆம் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி.. 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு நிகழ்வுக்கு பின்னர் உருவான முதல் நட்சத்திர கூட்டங்களை பார்க்க போகிறது...

fig: James Webb Space telescope

சூரியனும் பூமியும், தமது ஈர்ப்புவிசையால் ஒருவரை ஒருவர் இழுக்கும்போது, ஒரு குறிப்பிட்ட புள்ளியில், இரண்டு விசைகளும் சமநிலையில் இருக்கும். அதாவது ஈர்ப்பு விசையே இருக்காது. இதுபோல் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 5 புள்ளிகள் இருக்கிறது. So இந்த புள்ளிகளில் எதாவது ஒரு பொருளோ அல்லது விண்கல்லோ, ஏன் ஒரு குட்டி கிரகமோ வந்தால் அங்கேயே நிலையாக ஐக்கியமாகி விடும். இதை Lagrange and Euler என்ற இரு அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த புள்ளிகளுக்கு Lagrange points என்று பெயர்... அவைதான் L1, L2, L3, L4, L5 புள்ளிகள். பார்க்க படம் 2.

படம் 2. Lagrange points

என்னது Lagrange points டா... எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே... ஆமாங்க நாம engineering இல் முட்டி முட்டி படித்த விசயம் தாங்க இது.. நான் முட்டுன முட்டுல உடைஞ்சது என் மண்டை மட்டுமல்ல எங்க வீட்டு சுவரும் தான்...  Okey..

இந்த Lagrange புள்ளிகளில் உள்ள L2 புள்ளி இன்னிக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.. அமாம் இந்த L2 புள்ளியில் ஜேம்ஸ் வெப் என்ற மிகப்பெரிய தொலை நோக்கியை நிலை நிறுத்த நாசா, ESA மற்றும் சில  நாடுகள் இணைந்து, ஜேம்ஸ் வெப்பை இன்று விண்வெளிக்கு அனுப்புகின்றனர். வழக்கமாக விண்வெளி செயற்கை கோள்கள் பூமியை சுற்றி வரும். ஆனால் இந்த ஜேம்ஸ் வெப் L2 புள்ளியில் பூமிக்கு பின்னால், பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையில், சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில், சூரிய ஒளியில் இருந்து மறைந்திருந்தபடி, வளிமண்டல தூசுகள் இல்லாமல் சூரியனையே சுற்றிவரும். 

ஏன் இந்த லக்ரேன்ஜ் புள்ளிகள்? 

இப்புள்ளிகளில் ஈர்ப்பு விசை சமநிலையில் இருப்பதால் இந்த புள்ளிகளில் சாட்லைட்டுகளை நிறுத்தி வைத்தால், எந்தவித எரிபொருள் தேவை இல்லாமல், அவை பூமியுடன் இணைந்து சுற்றிவரும். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, ஒரேயிடத்தில் நின்றபடி, பூமியுடன் இணைந்து சூரியனைச் சுற்றி வரவேண்டுமென்றால், அது பூமியின் வேகத்தில் இயங்க வேண்டும். அவ்வளவு அதிவேகத்தில் இயங்குவதற்கு அளவில்லா எரிபொருள் தேவைப்படும். அவ்வளவு எரிபொருளை எடுத்துச் செல்லும் வசதி ஜேம்ஸ் வெப்பிடம் கிடையாது. அந்த மாபெரும் சிக்கலை, L2 புள்ளிமூலம், இயற்கை தீர்த்து வைத்திருக்கிறது. மேலும் ஜேம்ஸ் வெப் இருட்டை பார்ப்பதால் சூரிய ஒளி இல்லாத இருட்டான இடம் தேவை. இதையும் L2 புள்ளி மூலம் இயற்கை தீர்த்து வைக்கிறது. இயற்கையை அறிவது தான் அறிவியல்.. ஆனால் பாருங்க சிலர் செயற்கை தான் அறிவியல் என்று சொல்லிக்கொண்டே திரிவார்கள்... 

இவற்றில் L1, L2, L3 ஆகிய மூன்று புள்ளிகளும் திடமற்ற சமநிலைப் புள்ளிகள். சற்றுப் பெரிய எடையுள்ள பொருட்களால் அங்கு நிலையாகத் தங்க முடியாது. விண்கற்கள் அங்கே நிலையாக தங்கிவிட முடியாது.  ஆனால், பூமியின் இடம் வலமாக இருக்கும் L4, L5 புள்ளிகள், திடமான புள்ளிகள். அங்கு மிகப்பெரிய விண்கற்கள்கூட நிலைகொள்ள முடியும். 

இப்புள்ளிகளில் தங்கும் விண்கற்களை Trojan Asteroids என்று அழைப்பார்கள். வியாழனுக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள L4, L5 புள்ளியில் சுமார் 9800 விண்கற்கள் நிலையாக ஐக்கியமாகி உள்ளன. அவற்றில் 6000க்கும் அதிகமானவை, 2 கிலோமீட்டர் அளவுடையவை. 

இதுபோல பூமியின் L4, L5 புள்ளியில் எதாவது விண்கற்கள் இருக்கலாம் இல்லையா?? ஆம் 2010, 2020 ஆண்டுகளில்  TK7 & XL5 என்ற இரு விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இப்புள்ளிகளில் இருக்கும் விண்கற்களை கண்டறிவது மிக மிக சிரமம். 

இதுபோல் அங்கு வேறுசில விண்கற்களும் இருக்கலாம் இல்லையா. அந்தப் புள்ளிகளில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும், வேறு பெரிய விண்கற்கள் இருந்திருக்கலாம். இவை இந்திய சோதிடத்தில் சொல்லப்படும் இராகு கேது வாகவும் இருக்கலாம்.

ராஜா

Comments